டெல்லி தேர்தல் அறிக்கைகள் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

மொத்தத் தொகுதிகள்: 70
வாக்குப் பதிவு: பிப்ரவரி 8, தேர்தல் முடிவு: பிப்ரவரி 11

தலைநகர் டெல்லிக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டப் பரபரப்பை அடைந்திருக்கின்றன. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சி என்று ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகளே பிரச்சாரத்தின் தீவிர பேசுபொருள்கள். இந்தத் தேர்தல் அறிக்கைகள், டெல்லிவாசிகளுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் ஆச்சரியம் வேறுவிதமாக இருக்கும். தமிழகத்தை அடுத்தடுத்து ஆண்ட திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்திய சமூக நலத் திட்டங்களை கடுமையாகவும், கொச்சையாகவும் விமர்சித்த தேசியக் கட்சிகள் இன்று தமிழகத்தின் பாதையிலேயே காலதாமதமாக நடைபோட ஆரம்பித்திருக்கின்றன.

ஆம் ஆத்மி - கேஜ்ரிவால் ‘கேரண்டி கார்ட்'

1. மகளிர், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு பஸ் பயணம் இலவசம்
2. மகளிர் பாதுகாப்புக்கு மொஹல்லா மார்ஷல்கள், சிசிடிவி கேமராக்கள்
3. வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடிநீர்
4. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி
5. ஐந்து ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகள்
6. 11,000-க்கு மேல் புதிய மின்சாரப் பேருந்துகள்
7. டெல்லி மெட்ரோ சேவை 500 கிலோ மீட்டருக்கும் மேல் விரிவு
8. 24 மணி நேர வணிக வளாகங்கள், ஹோட்டல்களுக்கு அனுமதி
9. வீடில்லாதவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்
10. ஏழைகளுக்கு மலிவு விலை ஆம்ஆத்மி உணவகங்கள்
11. டெல்லி மாநகரக் காற்றும், யமுனையும் தூய்மைப்படுத்தப்படும்
12. அடுத்த ஐந்தாண்டுகளில் குப்பை இல்லாத டெல்லி
13. நிலத்தடி கம்பிவடம் மூலம் மின் இணைப்பு
14. இளைஞர்களுக்கு நகரில் புதிதாக விளையாட்டுக் கூடங்கள்
15. ஏழைகள் வசிக்கும் இடங்களில் அடித்தளக் கட்டமைப்பு மேம்பாடு.

பாரதிய ஜனதா - ‘சங்கல்ப பத்ரா'

1. ஏழைகளுக்கு கிலோ ரூ.2 விலையில் கோதுமை மாவு
2. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவ சேவை
3. அரசு வேலையில் காலியிடங்கள் பூர்த்தி
4. அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர்
5. டெல்லி விவசாயிகளுக்கும் கிசான் சம்மான் ரூ.6,000
6. ஏழை மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர்
7. புதிய குடியிருப்புகளுக்கு வளர்ச்சி வாரியம்
8. புதிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை அரசு திறக்கும்
9. 5,000 புதிய மின்சாரப் பேருந்துகள்
10. காற்று மாசு 70% குறைக்கப்படும்
11. ஏழைகளுக்கு 2 அறைகளுடன் வீடுகள்
12. ஊழலற்ற மாநில நிர்வாகம்
13. ஆஆகவைப் போல ஐந்து மடங்கு சாதிப்போம்
14. சபர்மதியைப் போல யமுனையும் தூய்மைப்படுத்தப்படும்
15. குளிரால் யாரும் இறக்காமல் தடுக்கப்படும்

காங்கிரஸ் - ‘நியாய யோஜனா’

1. வீடுகளுக்கு முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம்
2. மாதந்தோறும் வீடுகளுக்கு 20,000 லிட்டர் குடிநீர்
3. மின்சாரம், குடிநீரைச் சேமித்தால் ரொக்க ஊக்குவிப்பு
4. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000
5. வேலையில்லா முதுகலைப் பட்டதாரிகளுக்கு ரூ.7,500
6. மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.5000
7. சுற்றுச்சூழலைக் காக்க பட்ஜெட்டில் 25% நிதி
8. ஏழை மாணவர்களுக்கு இலவச கோச்சிங்
9. சிஏஏவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்
10. என்ஆர்சி, என்பிஆர் இப்போதுள்ள வடிவில் அமலாகாது
11. ரூ.15 விலையில் உணவு தர ‘இந்திரா' உணவகங்கள்
12. மகளிர், மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் சேவை
13. பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி
14. பட்ஜெட்டில் 25% போக்குவரத்து, கட்டமைப்புக்கு
15. சுற்றுச்சூழலைக் காக்கும் திட்டங்களுக்குத் தனி அறிக்கை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

56 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்