எப்படிச் செலவழிக்கிறார்கள் எம்.பி-க்கள்?

By சமர்த் பன்சால்

ஆண்டுதோறும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி என்று ஒவ்வொருவருக்கும் ரூ. 5 கோடி ஒதுக்கப்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள் என்றால், அவரவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலும், மாநிலங்களவை உறுப்பினர் என்றால், அவர் விரும்பும் எந்த இடத்திலும் இந்த நிதியை வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கலாம். 1993-94-ல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ. 5 லட்சம் என்ற அளவில் தொடங்கிய இந்த ஒதுக்கீடு இன்றைக்கு ரூ. 5 கோடி ஆகியிருக்கிறது. 2014-15 நிதியாண்டில் இந்த ஒதுக்கீட்டில் வெறும் 5.4% தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறது புள்ளிவிவரங்கள், திட்ட அமலாக்கல் துறை அமைச்சகம். இன்னும் சில அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...

* பாஜக உறுப்பினர்கள் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே பரிந்துரைத்துள்ளனர். சராசரிப் பரிந்துரை ரூ.1.47 கோடி. இவர்களோடு ஒப்பிடும்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் தேவலாம். சராசரிப் பரிந்துரை ரூ.2.86 கோடி.

* 55 உறுப்பினர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகம் செலவிடவில்லை. இந்தக் கணக்கின்படி பரிந்துரைக்கப்பட்ட தொகையின் சராசரி ரூ.2.16 கோடி. செலவிடப்பட்ட தொகையின் சராசரி ரூ.57 லட்சம்!

* ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீரம், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் மொத்த பரிந்துரையே ரூ. 1 கோடியைத் தாண்டவில்லை.

* ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழகம் நிலைமை தேவலாம். தமிழகத்தின் பரிந்துரைத் தொகை சராசரியாக ரூ.3.5 கோடி. எல்லாத் தொகுதிகளிலும் ரூ. 1 கோடிக்கு மேல் பரிந்துரைத் திருக்கிறார்கள்.

* கேரள உறுப்பினர்கள்தான் அதிகபட்சமாக, சராசரி ரூ.7.3 கோடிக்குப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

* 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை. மொத்த மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் சுமார் 41% பேர் எதுவும் பரிந்துரைக்கவில்லை.

* 278 தொகுதிகளில் ஒரு ரூபாய்கூடச் செலவிடப்படவில்லை. இது மொத்த மக்களவைத் தொகுதிகளில் 51%.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

51 mins ago

இலக்கியம்

7 hours ago

சினிமா

32 mins ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

சினிமா

1 hour ago

மேலும்