காஷ்மீரிகளைக் கொல்லும் புகையிலை

By செய்திப்பிரிவு

காஷ்மீரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் எமனாகியிருக்கிறது புகையிலை. வருஷத்துக்கு 4.7 லட்சம் பேர் இருமல், மூச்சிரைப்பு, மூச்சடைப்பு என்று சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை செலவு மட்டுமே ரூ.210 கோடி. சுவாச நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தேசிய சராசரியைப் போல மூன்று மடங்கு ஆகியிருக்கிறது. குளிர்ப் பிரதேசம் என்பதோடு, சமூக அமைதியின்மை உண்டாக்கும் மனவுளைச்சலும் சேர்ந்துதான் இந்த அளவுக்குப் புகைபிடிக்கும் பழக்கத்தை காஷ்மீரிகளிடம் கொண்டுவந்திருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். காஷ்மீர் அரசு முன்பு இதன் தீவிரத்தை உணர்ந்து புகையிலைப் பொருட்களுக்கு 40% வரி விதித்திருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரம் செல்லாக்காசாகிவிட்ட நிலையில், இந்த வரி 28% ஆகக் குறைந்துவிட்டது. விளைவாக, புகைவாலாக்கள் கூடுதலாகப் புகைவிடுகிறார்கள்; மார்புக்கூடுகள் நடுங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்