துறைகளில் நடந்தது என்ன?- சுகாதாரத் துறை : சாதனைகள் சோதனைகள்

By செய்திப்பிரிவு

சாதனை

‘தூய்மை இந்தியா’ திட்டத்தை 2014-ல் கொண்டு வந்ததுபோல், மருத்துவம், சுகாதாரம் விஷயத்தில் கடந்த ஆண்டு ‘ஆரோக்கியமான இந்தியா’ எனும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, “அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் டயாலஸிஸ் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும். டயாலஸிஸ் சிகிச்சைக்கான சில மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான சுங்கவரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்” என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு அளவில் நாடு முழுவதும் பெருகிவரும் சிறுநீரக நோயாளிகளுக்கு இது சின்ன ஆறுதல்.

தரமான பொது மருந்துகள் கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 3,000 அரசு மருந்துக் கடைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு.

பெண் குழந்தைகள் இயல்பாக வாழ்வதை உத்தரவாதப் படுத்தும் வகையில், கொண்டுவரப்பட்டுள்ள ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்களைப் படிக்கவைப் போம்’ திட்டம். மத்திய அரசின் நேரடிப் பார்வையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைபோல மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளைத் திறக்கவும் ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளின் படுக்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை மாநில அரசுகள் வசம் ஒப்படைக்கவும் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் இலக்கு எட்டப்பட்டால் அது ஒரு புரட்சியாக அமையும்.

மத்திய சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர் களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தி உத்தரவிட்டார் மோடி. புகையிலைப் பொருட்களின் உறைகளில் புற்றுநோய்க்கான எச்சரிக்கை அடங்கிய புகைப்படம் 85% வரையில் பெரிதாக்கப்பட்டிருக்கிறது.

சோதனைகள்:

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை நோக்கி நகர்ந்திருப்பது. இந்த விஷயத்தில் மாநிலங்களின் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கி இருப்பது.

மேகி நூடுல்ஸ் தொடர்பான சர்ச்சை நாட்டைக் குலுக்கியது. உத்தரப் பிரதேசத்தின் பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில் அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாகப் பல மாநிலங்களில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தெரிவித்தார். இந்தியாவில், மேகி நூடுல்ஸைத் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் மேகி விற்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சைக் கட்டணங்கள், முறைகேடுகள் இவையெல்லாம் அதிகரிப்பது தொடர்பாக அரசு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. காப்பீட்டு முறையை நோக்கி மக்களை நகர்த்தும் நடவடிக்கைகளும் மோசமானவை.

சுகாதாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் பணிகள் எல்லைக்குட்பட்டவைதான் என்றாலும், ஒரு தேசத்தின் கொள்கை வகுப்பு, நிதியுதவி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை உருவாக்குவது மத்திய அரசின் கையிலேயே இருக்கிறது. மோடி அரசு செய்திருப்பது என்ன?

எண் களம் - இரண்டு ஆண்டுகளில் தொழில்சூழல்: ஒப்பீடு

ஒரு நாட்டில் வணிகம் அல்லது தொழில் நடத்துவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்பதை மதிப்பிடுவதை ஆங்கிலத்தில் Distance to frontier score என்கிறார்கள். அதிகமான ஸ்கோர்கள் என்றால் சூழல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்