360: நான்கில் ஒரு பங்கு தொகுதிகள் பழங்குடியினர் கைகளில்...

By செய்திப்பிரிவு

நாட்டிலுள்ள மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளில் 133 தொகுதிகளின் வெற்றிவாய்ப்பை வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரே தீர்மானிக்கவிருக்கிறார்கள். இத்தொகுதிகளில் வனப்பகுதிகளில் வசிப்பவர்களே வாக்காளர்களில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். 

பாஜக ஆட்சிக்காலத்தில், வனப்பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் கடுமையான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றமும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே உத்தரவிட்டது. தற்போது, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பாஜக அரசு இந்த வழக்கு விசாரணைகளில் பழங்குடியினருக்கு ஆதரவாக நடந்துகொள்ளவில்லை என்பதால் கடும் அதிருப்தி நிலவுகிறது.

2018-ல் நடந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பழங்குடியினருக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்ற வாக்குறுதியால் காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களிலும் முந்தைய தேர்தலில் இழந்த தொகுதிகளைத் திரும்பவும் மீட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலிலும் அதே வாக்குறுதியோடு களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்