மாயாவதி கைகளில் துருப்புச்சீட்டு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் – பகுஜன் சமாஜ் கூட்டணி ஏன் அவசியம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பாஜக எதிர்ப்புக் கூட்டணியை அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது காங்கிரஸ். ஆனால், பேச்சுவார்த்தை உருத்தேறவில்லை.

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சியுடன் கூட்டணி அமைத்த மாயாவதி, அங்கு தன்னுடைய கட்சி இரண்டு இடங்களில் வெல்ல வழிவகுத்திருக்கிறார். ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து நின்றது. ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் மூன்று இடங்களை வென்ற அக்கட்சி, இப்போது ஆறு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ராஜஸ்தானில் 2013-ல் தேர்தலில் 3.4% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, இந்தத் தேர்தலில் 4% பெற்றுள்ளது. ஆனால், மத்திய பிரதேசத்தில் 2013-ல் 6.29%ஆக இருந்த அதன் வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் 5% ஆகக் குறைந்துள்ளது.

சத்தீஸ்கரில் மாயாவதியுடன் கூட்டணி அமையாவிட்டாலும் காங்கிரஸின் வெற்றி உறுதியானதுதான். ஆனால், மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பகுஜன் சமாஜ் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் இரண்டு கட்சிகளுக்குமே  இன்னும் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும். தேர்தலுக்குப் பின் இப்போது இரு கட்சிகளும் நெருங்கி வந்திருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் முன்கூட்டி முடிவெடுத்தால் இருவருக்கும் நன்மை பயக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்