2 மினிட்ஸ் ஒன்லி 18 : தனி ஒருவன்!

By ஆர்.ஜே.பாலாஜி

மனது சங்கடமான ஒரு வாரத் தில் இருக்கிறோம். கஜா புயல் தந்த வலி. இந்த முறை சென்னையில் புயலின் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. டெல்டா பகுதியில் என்ன நடந்தி ருக்கு என்பதை அப்பகுதியைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் யாரா வது இருந்தால் அவர்களிடம் பேசிப் பார்க்கும்போதுதான் புரி யும். செய்தி சேனல்கள் உள்ளே போகமுடியாத, என்ன பாதிப்பு என்பதைக் காட்டமுடியாத அள வுக்கு பல கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

சென்னையில் ‘வார்தா’ புயல் உள்ளிட்ட பெருவெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டதைவிட பன் மடங்கு அங்கே பாதிக்கப்பட்டிருக் கிறது. குறிப்பாக எல்லோருடைய வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போயிருக்கிறது. 100 தென்னை மரங்கள் இருந்த ஒரு விவசாயியிடம் இப்போது ஒன்றுகூட இல்லை. 500 முந்திரி மரங்கள் இருந்த தோட்டம் வெறிச் சோடிக் கிடக்கிறது. எனக்குத் தெரிந்த உதவி இயக்குநர் ஒரு வர், “விவசாயத்தை நம்பி இருந்த எங்க குடும்பம். இனி அடுத்த 5 வருஷத்துக்கு என்ன செய்யப் போறோம்னே தெரியல!” என்று வருந்திக்கொண்டிருக்கிறார்.

அழ வைத்த புயல்

ஒரு வீடு இடிந்தால் அடுத்த 3 மாதங்களிலோ, 6 மாதங் களிலோ கட்டிக்கொள்ளலாம். அதுவே, 100 தென்னை மரங்கள் இருந்த நிலத்தில் அதே மாதிரி 100 தென்னையை திரும்பக் கொண்டுவர எத்தனை ஆண்டுகள் ஆகும்என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு விவசாயியிடம் 100 தென்னை மரங்கள் இருந்தால் அதை முதலீடாக வைத்து, ‘‘தன் பிள்ளைக்குத் திருமணம் இருக்கு. ரூ.3 லட்சம் கடன் வேண்டும்’’ என தென்னை மண்டிக்காரரிடம் உரிமையுடன் கேட்க முடியும்.

அதே மாதிரி குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணம் கட்ட கடன் வாங்க முடியும். இப்படியெல்லாம் உதவியாக இருந்த மரங்களை இழந்துவிட்டு இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் நிலைமை வந்திருக்கிறது.

நாம் கேள்விப்பட்ட வரைக் கும் இப்போதைக்கு மெழுகு வத்தி, பெட்ஷீட், கொசுவத்தி இந்த மூன்றுக்குமான தேவைதான் அப் பகுதியில் முக்கியமானதாக இருக் கிறது. பல கிராமங்கள் இப்போது வரை மின்சார வசதி இல்லாமல் தவிக்கின்றன. இதெல்லாம் இந்த வாரம்தான். அடுத்த வாரம் தேவை மாறும். அடுத்த மாதம் இன்னொரு தேவை இருக்கும். அடுத்த ஆண்டு அந்தத் தேவை முடிந்திருக்காது. ஏன்னா அப்போ தும் அவர்கள் பாதிப்பு தீர்ந்திருக்காது.

‘‘டி.வி-யில் பார்த்தேன். பாதிப்பு அதிகம்தான். மனசு கேட்கல. இன்னைக்கு மெழுகுவத்தி வாங்க காசு கொடுத்திருக்கேன் என்ப தெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அது இன்றைய தேவை மட்டும். அதாவது இது தற்போ தைய நிவாரணம் மட்டும்தான். புனரமைப்புக்கு பல மாதங்கள், பல வருடங்கள் ஆகும்.

 

 

 

அங்கே வேரோடு விழுந்திருக் கும் மரங்கள் குறைவு. பாதி யோடு முறிந்த மரங்களின் எண் ணிக்கை அதிகம். இதெல்லாம் சரிசெய்ய, விவசாயிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப பல வருடங்கள் வேண்டும். இந்த நீண்ட கால காத்திருப்புக்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர் களுக்கு என்ன மாதிரி உதவ முடி யும் என்கிற புரிதல்தான் இப்போ தைய தேவை. ஆகவேதான் இந்த 10 நாட்கள் உதவி என்கிற உணர்ச்சியைக் கடந்து ‘லாங் டைம்’ உபயோகமாக நாம் என்ன செய்ய முடியும் என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

டெல்டாவுக்கு ஏன் வரல?

இப்போது வரை முகநூல் வழியாக 100-க்கும் மேற்பட்ட வர்கள், ‘என்ன பாலாஜி, சென்னை வெள்ளம் வந்தப்போ இறங்கி வேலை செய்தீங்க. இப்போ டெல்டாவுக்கு ஏன் எதுவுமே செய்யல?’ன்னு கேட்குறாங்க. முன்பு செய்ததை ஞாபகத்துல வைத்து இப்படி என்னைக் கேட்ப தற்கு நன்றி. ‘இதுக்கு நான் ஒருவன் செய்கிறேன். என்னை மாதிரி இன்னொரு நடிகர் செய்ய வரணும்’னு இல்லாமல், என்னை யும் சேர்த்து நாம ஒவ்வொருத் தரும் களத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி ஒரு அவசியம் அங்கே நிலவுகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல ணும்னா ஒரு ஆள், ஒரு குடும் பத்தில் உள்ள ஒரு நபரை தத்தெடுக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 100 விதைகள் தேவைப்படும் என்றால் அதை நான் வாங்கிக் கொடுக்கிறேன் என முன்வரணும். பாதிக்கப்பட்ட விவ சாயி பையனின் அடுத்த 3 மாத பள்ளிச் செலவை ஏற்க ஒருவர் முன்வர வேண்டும். இது எல்லாமே ஒரு தனிப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் மீது வைக்கப்பட வேண்டிய அக்கறையாக இருக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன்பு சொன்னதுதான். நம் ஒருவ ரால் ஒட்டுமொத்த இந்தியாவை மாற்ற முடியாது. அதேபோல இன்னைக்கு பாதிப்புக்கு உள்ளான மொத்த டெல்டா பகுதிகளையும் ஒருவர் தத்தெடுத்து உதவி செய்ய முடியாது. ஆனால், பாதிக்கப்பட்ட ஒரு தனி மனிதரோட வாழ்க்கை மாற காரணமாக இருக்கலாம். கண்டிப்பாக இருக்க முடியும்.

முன் செல்வோம்...

சாப்பிட்டே 2 நாட்கள் ஆகிற நிலையில் ரூ.15 மதிப்புள்ள 5 டைகர் பிஸ்கட் பாக்கெட்களை தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக் கம் கொண்டுவந்து என் கையில் திணித்த ஒரு பெரியவரும், சென்னை ஜெமினி மேம்பாலத் துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையே 20 ஆயிரத்துக்கும் மேலான வாகனங்கள் நெரிசலில் சிக்கியபோது சற்றும் யோசிக்கா மல் அதை சரிசெய்ய களத்தில் இறங்கிய 10 இளைஞர்களும்தான் சென்னையில் வெள்ளம் வந்த போது என்னை சாலையில் இறங்க வைத்தனர். அவர்கள்தான் அப் போது என் இன்ஸ்பிரேஷன்.

அதேபோல உங்களுக்கும் யாரோ ஒருத்தர் இன்ஸ்பிரேஷ னாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட ஒரு மனிதரோட வாழ்க்கையில் திரும்ப சந்தோஷம் வர நீங்கள் காரணமாக இருந்தால் நீங்களே இன்னொருவருக்கு அந்த இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள். அதுக்காகத்தான் இப்போதே களத்தில் இறங்கச் சொல்கிறேன். டு கெதர் வி கேன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்