பொருளியலில் மார்ஷலின் ‘மும்மைக் கோட்பாடு’

By செய்திப்பிரிவு

ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஏன் அருகருகிலேயே மையங்கொள்கின்றன என்பதற்கான மூன்று காரணங்களே ‘மும்மைக் கோட்பாடு’ என்று வழங்கப்படுகிறது.

1. தங்களுடைய நிறுவனத்துக்கேற்ற தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் அதிகம் கிடைக்கும் இடத்திலேயே அவை நிறுவனங்களை அமைக்கின்றன. 2. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் அருகருகில் அமைவதால், அவர்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், குறைந்த செலவில் அனைவருக்கும் வழங்கவும் முடிகிறது. 3. புதிய சிந்தனைகள் அல்லது வழிமுறைகள் தோன்றினால் அதை அனைத்து நிறுவனங்களும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது எளிதாகிறது.

இம்மூன்று காரணங்களால் நிறுவனங்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது. பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் ஆல்பிரட் மார்ஷல் இதைத் தன்னுடைய ‘பொருளாதாரக் கொள்கைகள்’ என்ற நூலில் கூறியிருப்பதால், இதை மார்ஷலின் ‘மும்மைக் கோட்பாடு’ என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்