ஸ்டார்பக்ஸின் பிராயச்சித்தம்!

By செய்திப்பிரிவு

அமெரிக்காவிலுள்ள ஸ்டார்பக்ஸ் காபி கடையொன்றில் இரு கறுப்பின இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தின் விளைவால் ஸ்டார்பக்ஸ் நிறுவன அதிகாரி கெவின் ஜான்சன் மன்னிப்பு கேட்டார். அதோடு, ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இன வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்த பயிற்சியளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த செவ்வாய் அன்று அமெரிக்காவில் உள்ள 8000க்கும் மேற்பட்ட கிளைகளும் மூடப்பட்டு சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த ஒருநாள் கடை அடைப்பால் சுமார் 1.5 கோடி டாலர் விற்பனை இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், இந்த அணுகுமுறையால் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றிருக்கிறது ஸ்டார்பக்ஸ்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

1 hour ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்