அற்றைத் திங்கள் 8 - ‘செவி கெடுக்கும் ஹார்மோனியம்’

By பழ.அதியமான்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை இசைவிழாவில் எந்தக் கச்சேரியிலாவது ஹார்மோனியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ‘நமது சங்கீதத்தில் பக்கவாத்தியமாக ஹார்மோனியம்பயன்படுத்துவதற்கு நான் எதிராகவே இருக்கிறேன். நமது ஆசிரமத்திலிருந்து அது முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. அகில இந்திய வானொலியிலிருந்தும் அதைக் கைவிடச் செய்தால், இந்திய இசை உலகிற்குப் பெரிய சேவையாக அது இருக்கும்’ - கொல்கத்தா வானொலி நிலையத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கடிதத்தின்(19.1.1940) ஒரு பகுதி இது. ‘சங்கீத சிந்தனை’ என்கிற தாகூரின் தொகுப்பில் இக்கடிதம் இடம்பெற்றிருக்கிறது.

தாகூர் மட்டுமல்ல, மேற்கத்திய இசை வல்லுநரான ஜான் போல்ட்ஸ் (1880–1939) போன்றோரும் இந்திய இசையோடு ஹார்மோனியத்தைக் கலப்பதை விரும்பவில்லை. ‘ஹார்மோனியம் இந்தியத் தன்மையும் இசைத்தன்மையும் அற்ற இசைக் கருவி’ என்று அவர் எழுதினார் (‘தி இந்தியன்லிஸனர்’, 22-6-1938). அகில இந்திய வானொலியில் இன்றும் ஒலிக்கும் அடையாள இசையை வால்டர் காஃப்மேனுடன் இணைந்து உருவாக்கியவர் போல்ட்ஸ். ஹார்மோ னியத்துக்கு எதிரான அவரது கட்டுரையின் தலைப்பு ‘Harm-monium’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்