விலக மறுக்கும் திரைகள் – 5 - சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது?

By பா.ஜீவசுந்தரி

ஒளியைப் பிரதானப்படுத்தும் பண்டிகைக் களியாட்டங்கள், கூடவே பெருத்த ஓசையுடனும் சேர்த்தே கொண்டாடப்படுகின்றன. காதுகளையும் நிசப்தத்தையும் களங்கப்படுத்தும் ஓசைக்கு விடை கொடுப்பதுதான் எப்போது? ஒலிக்கோவைகளை இசையாக ரசிக்கலாம். இந்தச் சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது? பட்டாசுகள் உற்பத்தியும் வியாபாரமும் பெரிய அளவில் மாறிப்போன பின், இந்தக் கேள்விக்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா? குழந்தைகளின் விருப்பம் என்று அவர்கள் மீதே பழி போடப்படுவதும் ஏற்புடையதல்ல. குழந்தைகளின் எல்லா விருப்பங்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அவர்கள் பிடிவாதமாகக் கேட்பவை அனைத்தும் ஏற்கவேண்டியவைதானா? தீபாவளிக்கும் கார்த்திகைத் திருநாளுக்கும் மட்டும் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசுகள், இப்போது எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் உரியதாக மாறியிருக்கின்றன. எந்த நேரத்தில் வெடிப்பது என்கிற நோக்கம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

பட்டாசு ஏற்படுத்தும் பாதிப்புகள்: சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்... அதிலும் இதய நோயாளிகள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயாளிகளின் பாடு பெரும் திண்டாட்டம். சத்தத்தோடு மட்டும் இல்லாமல், கடும் புகை மூட்டமும் பாடாய்ப்படுத்தும். மனிதர்கள் மட்டுமல்ல, வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளும் அவதிக்குள்ளாகும். அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் புறாக்கள் இந்த வெடிச் சத்தத்தில் பதறிக் கூட்டமாகப் பறந்து அங்குமிங்கும் அலைபாய்வதும் மனதை வருத்தும் காட்சிகள். அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத, ஒளிச் சிதறல்களால் மட்டும் மகிழ்வூட்டும் மத்தாப்புகளைக் குறைந்த அளவில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதோடு, இது கட்டுக்குள் வந்தால் நன்றாக இருக்கும். எல்லாத் தரப்புக்கும் உவப்பானதாகவும் இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்