தொழில்நுட்ப மறைஞானி

By பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

புலம்பெயர்ந்த ஒரு மண்வள நிபுணரான தந்தைக்கும், தாவரவியலாளரான தாய்க்கும் மகவாக அக்டோபர் 15, 1923ஆம் ஆண்டு கியூபாவில் பிறந்தவர் இடலோ கால்வினோ. அவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அவர்களது குடும்பம் இத்தாலிக்குத் திரும்பியது. பெற்றோரைப் போலவே விவசாயக் கல்வியைக் கற்க இரண்டு பல்கலைக்கழகங்களில் விருப்பமின்றிச் சேர்ந்து, அதை முடிக்க முனைந்தபோதும் இரண்டாம் உலகப் போரால் அவரது கல்வி தடைபட்டது. கட்டாய ராணுவ ஆள் சேர்ப்பிலிருந்து தப்பினார். நாஜி ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய இத்தாலிய எதிர்ப்புப் படையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் போரிட்டார். கட்டாய ஆள் சேர்ப்பைத் தவிர்த்ததற்காக கால்வினோவின் பெற்றோரை நாஜிப் படைகள் பிணைக்கைதிகள் ஆக்கின. போர் முடிந்ததும், கலைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, பதிப்பகங்களிலும் பத்திரிகைகளிலும் வேலை பார்த்தார்.

எழுத்தில் ஏற்பட்ட மாற்றம்: முப்பது வயதுக்கு முந்தைய கால்வினோ அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ஹங்கேரியின் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகினார். தனது போர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பகட்ட கதைகளை, நாவலை எழுதிய கால்வினோ 1950களுக்குப் பிறகு முற்றிலும் புதிய முறையில் தனது படைப்புகளை எழுதத் தொடங்கினார். இக்காலகட்டத்தைய கால்வினோவே இலக்கிய உலகில் புகழ்பெற்றவராகிறார். முன்பு தொகுக்கப்படாத அவரது கட்டுரைகளின் புதிய தொகுப்பில் 1956-59ஆம் ஆண்டுகளில் அவர் எழுதிய மூன்று கட்டுரைகளை வாசிக்கையில் அவரது எதிர்கால எழுத்துமுறைக்கான வேட்கையை நாம் அறியலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுலா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்