காந்தியைக் கொண்டாடுவோம்!

By செய்திப்பிரிவு

சென்னை, தூத்துக்குடி, சேலத்தில் புத்தகக்காட்சி

சென்னை: பொன்மார் வேங்கடமங்கலம் பிரதான சாலையிலுள்ள சுவாசம் புக்கார்ட்டில் அக்டோபர் 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 31 வரை நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளுக்கு இங்கே 20% தள்ளுபடி உண்டு.
தூத்துக்குடி: பாளையங்கோட்டை சாலையிலுள்ள ராமையா மஹாலில் அக்டோபர் 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 20 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.

சேலம்: செர்ரி சாலையிலுள்ள வள்ளலார் புத்தகக்கடையில் அக்டோபர் 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 25 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.

‘வாசகசாலை’ விருதுகள் 2020

வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ‘வாசகசாலை’ விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதை, அறிமுக எழுத்தாளர், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு
சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. நவம்பர் 2019-லிருந்து அக்டோபர் 2020 வரை வெளிவந்த படைப்புகளைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 99426 33833

காந்தியைக் கொண்டாடுவோம்!

காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அக்டோபர் 2 – 4 வரை சிறப்புச் சலுகை அறிவித்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம். ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலுக்கு மட்டும் அல்ல; ‘இந்து தமிழ் திசை’யின் அனைத்து வெளியீடுகளுக்குமே 25% விலைத் தள்ளுபடி. தொடர்புக்கு: 74012 96562, 74013 29402. முகவரி: ‘இந்து தமிழ்’ நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2. இணையம் வழி பெற: store.hindutamil.in/publications

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்