பிறமொழி நூலகம்: ஜாக்கிசானின் சாகசப் பயணம்

By செய்திப்பிரிவு

நெவர் க்ரோ அப்
ஜாக்கி சான் வித் ஸூ மோ
கேலரி புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.399

ஜாக்கிசான் ஒரு சாகச நாயகனாக நிலைத்திருப்பவர். குழந்தைகள், பதின்பருவத்தினரின் விருப்பத்துக்குரியவராகவும் இருப்பவர். அதற்குக் காரணம், சண்டைக் காட்சியில் அவர் காட்டும் வேகம், அதை காமெடியாக அணுகும் முறை, நடிப்பில் வெளிப்படும் வேடிக்கையான முகபாவம் போன்றவைதான். சர்வதேச அளவில் பல இளம் மனங்களைக் கட்டிப்போட்ட ஜாக்கிசானின் சுயசரிதை நூலே ‘நெவர் க்ரோ அப்’. ஜாக்கிசானின் இளமைக் காலம் தொடங்கி, ஏழு வயதிலேயே நாடகத் துறைக்குள் நுழைந்த கதை, திரைத் துறையில் நிகழ்த்திய அதிசயங்கள், படப்பிடிப்பின்போது எதிர்கொண்ட சாகச அனுபவங்கள் போன்றவற்றோடு ஒரு கணவராகவும் அப்பாவாகவும் வீட்டில் வாழ்ந்த கதைகளை அவரது திரைப்படம்போலவே சுவாரஸ்யமாகப் பேசுகிறது. ஜாக்கிசானின் நீண்ட பயணத்தை விரிவாகத் தெரிந்துகொள்ள உதவும் புத்தகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்