நூல் நோக்கு: உடல் பேசும் கதைகள்

By செய்திப்பிரிவு

லைலா எக்ஸின் ‘பிரதியின் நிர்வாணம்’ தொகுப்பிலுள்ள எட்டு கதைகளும் ஒரே கருப்பொருளின் எட்டு பரிமாணங்கள் எனலாம்.

அந்தக் கருப்பொருள் பெண்ணுடலை மையப்படுத்தியதாய் இருக்கிறது.  ஒவ்வொரு கதையையும் பெண்ணிடமிருந்தே தொடங்குகிறார். ஒடுக்கப்பட்ட குடும்ப அமைப்பையும் சமூகக் கட்டமைப்பையும் எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள் கதைமாந்தர்கள். பெண்களின் அரசியல் பார்வை இயல்பு வாழ்க்கையோடு எளிமையாக இருக்கிறது. ஆண்களின் அரசியல் பார்வை கற்பிதங்களிலிருந்து உருவாகிறது. இதை உடலை மையப்படுத்தி புனைந்திருக்கிறார். உடல் விரும்பும் வேட்கைக்கும் குழந்தைப்பேற்றை விரும்பும் குடும்ப அமைப்புக்குமான தர்க்கத்தையும், சொந்தங்களாலேயே சிதைக்கப்படும் பெண் உடலையும், வேதநூல், கலை, இலக்கியம் அணுகும் உடல் அரசியல் யதார்த்தத்திலிருந்து வேறுபடுவதையும், நிறம்வழி அடையாளப்படுத்தப்படும் சாதியத்தன்மையையும் விவாதப்பொருளாக்குகிறார் லைலா எக்ஸ்.

- கிருஷ்ணமூர்த்தி

பிரதியின் நிர்வாணம்

லைலா எக்ஸ்

மணல்வீடு பதிப்பகம்

விலை: ரூ.125 ,தொடர்புக்கு: 9894605371

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்