பிறமொழி நூலறிமுகம்: பெண்ணின் பார்வையில் உருது இலக்கியம்

By செய்திப்பிரிவு

லைசிறந்த எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் உருது மொழி இலக்கிய முன்னோடியும் ஆவார். புரட்சி எழுத் தாளரான சதத் ஹசன் மண்ட்டோவின் நெருங்கிய தோழியாக விளங்கி, உருது மொழி இலக்கியத்துக்கு அளப்பரிய பங்களிப் பைச் செய்தவர் அவர்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அவர். உடன்பிறந்தோருடன் போட்டியிட்டு கல்வி பெற நடத்திய போராட்டத்தில் இருந்து தொடங்கி, எழுத்தாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக, இயக்குநராக எனப் பல்வேறு பரிமாணங்களில் அவர் நடத்திய போராட்டங் கள் அவரது காலத்தின் புரட்சிகரமான நடவடிக்கைகள் என்று கருதத்தக்கவை.

தன் காலத்திய சமூகத்தில் பெண்களின் நிலையைத் தெள்ளத் தெளிவாக எழுத்துகளில் வெளிப்படுத்திய சுக்தாயின் இந்தச் சுயசரிதை முதன்முறையாக முழுமையான வடிவில் வெளிவந்துள்ளது. உருது மொழி யில் பெண்களின் பார்வையை மிக அழுத்தமாகப் பதிவுசெய்திருந்த சுக்தாயின் செறிவான எழுத்துகளில் அவரது இந்தச் சுயசரிதை தனிச்சிறப்பு மிக்க தனியொரு இலக்கியமாக மிளிர்கிறது. உருது மொழி இலக்கியத்தின் மைல்கற்களில் ஒன்றாகவும் உருப்பெற்றுள்ளது.

இஸ்மத் சுக்தாய்

எ லைஃப் இன் வேர்ட்ஸ் - மெமோய்ர்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு+ முன்னுரை -

எம். அசாசுதீன் -

பெங்க்வின் க்ளாசிக்ஸ் - விலை: ரூ. 399

- வீ.பா.கணேசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

25 mins ago

ஓடிடி களம்

27 mins ago

விளையாட்டு

42 mins ago

சினிமா

44 mins ago

உலகம்

58 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்