நான் என்னென்ன வாங்கினேன்?

By செய்திப்பிரிவு

முப்பதாண்டு காலமாக மொழிபெயர்ப்புக் கலையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜி.குப்புசாமியின் மனைவி நர்மதா குப்புசாமி, தனது முதல் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை ‘பாதரசம்’ பதிப்பகம் வாயிலாக வெளியிட்டதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது புத்தகம் குறித்துக் கேட்டபோது, “இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளைப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். அது எதேச்சையானதுதான் என்றாலும் ஒருவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. பிரிந்து வாழும் பெற்றோருடன் வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்கள், அடையாளச்சிக்கல், பாதுகாப்பு நடவடிக்கைகள் என நமது சமகாலத்தோடு நெருக்கமாக உறவாடும் கதைகள் இவை” என்றவர், “எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’, சுகுமாரனின் ‘செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல’, கபீரின் வாழ்க்கை வரலாறு, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய புத்தகங்களை வாங்கினேன். பெரிய மூட்டையோடுதான் ஆரணிக்குத் திரும்புவோம்” என்றார் நர்மதா குப்புசாமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்