பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகும் இனபேதம்!

By இராம.சீனுவாசன்

இராம சீனுவாசன்பொருளாதார வேறுபாட்டுக்கு இந்தியாவில் சாதி ஒரு முக்கியக் காரணம் என்பதைப் போல அமெரிக்காவில் நிறம். நிறத்தின் அடிப்படையில் அமெரிக்கர்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம் - அமெரிக்க இந்தியர், வெள்ளையர், கறுப்பர், இஸ்ப்பானிக், ஆசியன். இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார வேறுபாட்டை இக்கட்டுரை ஆராய்கிறது. ஒரு குடும்பத்தில் இரு தலைமுறைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டு அதற்கான காரணிகளை ஆராய்வது இக்கட்டுரையின் சிறப்பம்சம். 1978-83-ல் பிறந்த இரண்டு கோடி குழந்தைகளின் அப்போதைய குடும்பம் வருமானத்தையும் அவர்கள் 30 வயது தாண்டிய பிறகு அக்குடும்பங்களின் வருமானத்தையும் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை இப்படியாக சுருக்கிக்கொள்ளலாம்: பெற்றோர்களைவிட குழந்தைகள் குறைந்த வருவாய் பெரும் வாய்ப்புகள் மற்ற இனங்களைவிட அமெரிக்க இந்தியர் மற்றும் கறுப்பர் இனங்களில் அதிகம். கறுப்பர் இனத்தில் அதிக வருவாய் பெரும் பெற்றோர்களின் குழந்தைகள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கும், கீழ் நிலைக்குச் செல்வதற்கும் சம வாய்ப்பு உண்டு. அதுவே வெள்ளையர் இனத்தில் உயர்ந்த இடத்திலிருந்து கீழ் கீழ்நிலைக்கு செல்வதைவிட உயர்ந்த இடத்தில் தொடர்ந்து இருப்பதற்கு ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கறுப்பர், வெள்ளையர்களுக்கு இடையேயுள்ள பொருளாதார வேறுபாட்டுக்கு திறமையைவிட குடும்பச் சூழல் முக்கியக் காரணமாகிவிடுகிறது. குடும்ப நிலை ஒன்றாக இருந்தபோதிலும் வெள்ளையர்களைவிட கறுப்பர் இனக் குழந்தைகள் குறைவான வருவாய் ஈட்டுகின்றன. வெள்ளையர்களைப் போல ஆசிய இனத்தில் இரு தலைமுறைக்கு இடையே பொருளாதார முன்னேற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கறுப்பர் இன இளைஞர்களை ஊக்குவிப்பது, வெள்ளையர்களிடம் இனப் பாகுபாட்டுச் சிந்தனையைப் போக்குவது, நீதி வழங்குவதில் இன வேறுபாட்டை நீக்குவது, இனங்களுக்கிடையே உறவை மேம்படுத்துவது போன்றவை இன வேறுபாட்டைக் குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற பெரிய ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும்.

‘Race and Economic Opportunity in the United States’ by Raj Chetty and Nathaniel Hendren.

- இராம சீனுவாசன், பொருளியல் நிபுணர்.

தொடர்புக்கு: seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்