தொடுகறி: பிரபஞ்சனின் ஜோல்னாப் பைகள்

By செய்திப்பிரிவு

பிரபஞ்சனுக்கு ஜோல்னா பைகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு. வி்த்தியாசமான வண்ண வண்ண ஜோல்னா பைகளையே அவர் பயன்படுத்துகிறார். வெளியூர்களுக்குப் பயணிக்கையில் ஜோல்னாப் பைகள் அவர் கண்ணில் பட்டால் நான்கைந்து வாங்கி சேகரித்துக்கொள்வார்.

பேசும் இணைய எழுத்து

நெல்லையைச் சேர்ந்த சோம.அழகு, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கணித ஆய்வு மாணவி. தனது 25-வது வயதில் இணைய இதழ்களில் எழுதத் தொடங்கிய இவரது கட்டுரைகள், தொ.பரமசிவன், பாமரனின் வாழ்த்துரைகளோடு ‘திண்ணைப் பேச்சாய்...’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. தனது எழுத்துக்கு மனித வாசிப்பே அடித்தளம் எனவும், அனைத்தும் கற்பனையே என்பதற்கு மாறாக, ‘அனைத்தும் உண்மையே; உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை’ என்னும் பொறுப்பேற்பதே தன் எழுத்து எனவும் குறிப்பிடுகிறார் சோம.அழகு.

நாடக ஆளுமைகளுக்கு விருது!

மாற்று நாடக இயக்கத்தின் இந்த ஆண்டுக்கான பயிற்சி மே 21 முதல் மே 31 வரை நடைபெறுகிறது. 2018-ம் ஆண்டுக்கான ‘பேரா.சே.இராமானுஜம் நினைவு நாடக விருது’ ப்ரசன்னா ராமஸ்வாமிக்கும், ‘பரிக்‌ஷா ஞாநி நினைவு நாடக விருது’ எஸ்.எம்.ஏ.ராமுவுக்கும் வழங்கப்படுகிறது. வளரும் நம்பிக்கை நாடகர் விருது ஞா.கோரி, அஸ்வினி காசி இருவருக்கும் வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா மே 28 மாலை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெறும் நாடக விழாவில் வழங்கப்படவுள்ளது.

நூலகத்தால் உயர்ந்தவர்

பள்ளி இறுதி வகுப்பு படித்துவிட்டு நூலகராக சேர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ‘தமிழ் கவிதைகளில் சந்த அமைப்பு’ எனும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது 30 ஆண்டு கால நூலகப் பணியில் தான் வாசித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்களை சுவைபட தொகுத்து ‘நூலகத்தால் உயர்ந்தேன்’ எனும் தலைப்பில் 1000 பக்கங்களில் கொண்டுவந்திருக்கும் புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது.

வரலாறாகும் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கை

நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான செ.திவான், மறைக்கப்பட்ட வரலாற்றையும் வரலாற்றுத் திரிபுகளையும் தக்க ஆதாரங்களுடன் விளக்கிவருபவர். அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முனைப்பில் தற்போது ஈடுப்பட்டுள்ளார். அலாவுதீன் கில்ஜி பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைக்கும் சூழலில், செ.திவான் எழுதும் கில்ஜியின் வரலாறு பல புதிர்களுக்கான விடைகளைத் தரக்கூடும்!

தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

36 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

59 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்