எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் ‘செங்கோட்டை முழக்கங்கள்’ நூல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த1947 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலகட்டத்தில் புதுடெல்லி செங்கோட்டையில் நமது பிரதமர்கள் ஆற்றிய சுதந்திரதின உரைகளை எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி நூலாகத் தொகுத்துள்ளார்.

இதை ‘செங்கோட்டை முழக்கங்கள்' எனும் பெயரில்புத்தகமாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா தி.நகர் தக்கர்பாபா பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. முதல் பிரதியை இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட,‘இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்கக அலுவலர் ஷங்கர் சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வருமானவரித் துறை ஆணையர் (சென்னை) ரவி ராமச்சந்திரன், வருமானவரித் துறை ஆணையர் (பெங்களூரு) மதிவாணன், மருத்துவர் ஜெயஸ்ரீ, கல்வியாளர் மாலதி, ஊடகவியலாளர் வெங்கட பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகத்தின் விலை ரூ.350. இந்தியாவுக்குள் அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒருபிரதிக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக தமிழ் திசை’ பதிப்பகம், இந்துதமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 2. போன்:044-30899000 என்ற முகவரிக்கு அனுப்பலாம். store.hindutamil.in/publications என்ற வலைதளத்திலும் நூலைபெறலாம்.

அதில் உங்கள் முக வரி, கைபேசி எண்ணை குறிப் பிடுவது அவசியம். கூடுதல்விவரங்களுக்கு 7401296562 /74013 29402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், நந்தனத்தில் நடைபெறும் சென்னை புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’பதிப்பக அரங்கத்திலும் (ஸ்டால் எண்: 540, 541

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்