வலை 3.0: அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த இணையம்!

By சைபர் சிம்மன்

அப்போது உலகின் பல பகுதிகளில், இணையதளங்களும் அதற்கான சர்வர்களும் அமைக்கப்பட்டன. 1991-ம் ஆண்டில் நடைபெற்ற ‘ஹைபர்டெக்ஸ்’ மாநாட்டில் வலை முதல் முறையாகப் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு லீனியர் ஆக்சலேட்டர் மையமும் வலையில் இணைந்தது. செர்ன் ஆய்வுக்கூடத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் இணையதளம் இது. 1991-ம் ஆண்டு இந்த இரு இணையதளங்கள் மட்டுமே இருந்தன. 1992-ல் நெதர்லாந்து ஆய்வுக்கூடம் உள்பட ஏழு அமைப்புகளின் இணையதளங்கள் உருவாக்கப்பட்டன.

வலை வளர்ச்சி

இந்த இடத்தில் லீ உருவாக்கிய முதல் பிரவுசர் தொடர்பான சில முக்கிய விஷயங்களை அறிவது அவசியம். இந்த பிரவுசர் மூலம் அணுகுவதற்கு அதிகத் தகவல்கள் இருக்கவில்லை. ஆனாலும், பின்னாளில் வலை மூலம் சாத்தியமாகக்கூடிய பெரும்பாலான அம்சங்களை இந்த பிரவுசர் பெற்றிருந்தது.

கறுப்பு - வெள்ளை தன்மையைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் சில அம்சங்களைக் கொண்டிருந்தது. எனவே, இணைப்புகளை உருவாக்குவது, எழுத்துருக்களை மாற்றுவது, இணைப்புகளுக்கு இடையே தாவுவது உள்படப் பல அம்சங்கள் இருந்தன.

முக்கியமாக இந்த பிரவுசர் எடிட் செய்யும் வசதியைக் கொண்டிருந்தது. இதில் தகவல்களை அணுகுவதோடு, தகவல்களை உருவாக்கிப் பகிரவும் முடியும். அந்த வகையில், இந்த பிரவுசர் இரு வழிப் பாதையாகவும் அமைந்திருந்தது.

அது மட்டுமல்ல, இணையவாசிகளின் பங்களிப்பைச் சாத்தியமாக்கக்கூடிய சேவைகளைக் கொண்ட ‘வலை 2.0’ எனக் குறிப்பிடப்படும் இரண்டாம் கட்ட வலை புத்தாயிரத்துக்குப் பிறகே வளர்ச்சி பெற்றது. அதற்கான ஆதார அம்சங்கள் அனைத்தும் முதல் பிரவுசரிலேயே இருந்தது. ஆனால், இந்தச் சிறப்புகளை மீறி முதல் பிரவுசரில் ஒரு குறை இருந்தது.

அது ‘நெக்ஸ்ட்’ கணினியில் உருவாக்கப்பட்டிருந்ததால், அந்த வகைக் கணினிகளில் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் எல்லா வகையான கணினிகளிலும் அணுகக்கூடிய வகையில் எளிமையான பிரவுசர் ஒன்று உருவாக்கப்பட்டது. ‘லைன் மோடு பிரவுசர்’ எனும் அந்த பிரவுசரே வலைக்கான நுழைவு வாயில்.

புதுமைகளுக்கு அடித்தளம்

வலை பெரும் வளர்ச்சிக்குத் தயாராகிகொண்டிருந்த நிலையில், டிம் பெர்னர்ஸ் லீ, செர்ன் ஆய்வுக்கூடத்தில் பேசி, 1993-ல் வலைக்கான தொழில்நுட்பம், நிரல்களைப் பொதுவெளியில் அளிக்க சம்மதிக்க வைத்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைத் தன் பெயரில் காப்புரிமை பெற்று அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் அவர் நினைக்கவில்லை. 1994-ம் ஆண்டு, செர்ன் ஆய்வுக்கூடத்திலிருந்து லீ விடைபெற்று அமெரிக்காவில் ஸ்டான்போர்டு ஆய்வுக்கூடத்தில் இணைந்தார்.

அங்கிருந்தபடி வலையை நிர்வகிப்பதற்கான வைய விரிவு வலை கூட்டமைப்பை உருவாக்கினார். வலை இன்றளவும் எந்த ஒரு அமைப்பாலும், கட்டுப்படுத்தப்படாத அதன் அடிப்படையான மையமில்லாத் தன்மையோடு, எண்ணற்ற புதுமைகளைச் சாத்தியமாக்குவதற்கு இந்த முடிவே மூலக்காரணம்.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

உலகம்

20 mins ago

வணிகம்

37 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்