ட்ரம்ப்புக்கு இன்னொரு கட்டிப்பிடித்தல் தேவைப்படுகிறது: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எள்ளல் ஆலோசனை

By பிடிஐ

ஹக்கானி பயங்கரவாத குழுவிடமிருந்து பாகிஸ்தான் படைகள் அமெரிக்க-கனடா குடும்பத்தைக் காப்பாற்றியதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை வேறு வகையில் புதுப்பிக்க வழிவகை செய்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்தார்.

இது குறித்து ட்ரம்ப் தன் ட்விட்டரில், “பாகிஸ்தான் மற்றும் அதன் தலைவர்களுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள தொடங்குகிறோம். பல விஷயங்களில் பாகிஸ்தானின் ஒத்துழைப்புக்காக அவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபரின் இந்த ட்வீட்டை வெளியிட்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தன் வாசகமாக, “மோடிஜி விரைந்து செயல்படுங்கள். அதிபர் ட்ரம்புக்கு இன்னுமொரு கட்டிப்பிடித்தல் தேவைப்படுவது போல் தெரிகிறது” என்று எள்ளல் தொனியுடன் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த முறை பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது மோடியும், ட்ரம்பும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்ட காட்சிகள் வெளியாகின.

இதனையே தற்போது ராகுல் காந்தி எள்ளல் தொனியுடன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்