மேற்கு வங்கத்தில் டெங்குவால் 30 பேர் பலி: மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டில் டெங்குவால் 30 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய மம்தா, ''மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டில் டெங்குவால் 30 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்த 30 பேரில் 14 பேர் கடந்த சில மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளுக்கும் மாநில சுகாதாரத் துறையும் மேற்கு வங்கத்தில் டெங்குவால் ஏற்படும் இழப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இதில் தவறான தகவல்களைக் கூறும் பேச்சுக்கே இடமில்லை.

கொல்கத்தா மாநகராட்சி 6 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. பித்தாநகர் மாநகராட்சியில் 2 பேரின் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மாநில சுகாதாரத் துறை இயக்குநர் பி.ஆர்.சத்பதி இதுகுறித்துக் கூறும்போது, ''டெங்குவில் உள்ள 4 வகைகளில் டைப்- 2 மற்றும் டைப் - 4 ஆகியவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக் கணக்கீட்டின்படி, டைப் - 4 வகையால் 65% வகையினரும் டைப் - 2 வகையால் 24% வகையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தவறான அறிக்கைகளால் பொது மக்களை அச்சுறுத்தும் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்