கேரள முதல்வருடன் நடிகர் கமல் சந்திப்பு

By செய்திப்பிரிவு

கேரள முதல்வர் பினராயி விஜயனை நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக பினராயி விஜயன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் கமல்ஹாசனை மிக நீண்டகாலமாக எனக்குத் தெரியும். அவர் கேரளா வரும் போதெல்லாம் என்னை சந்தித்துப் பேசுவது வழக்கம். நான் முதல்வரான பிறகு முதல்முறையாக இருவரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினோம். இது தனிப்பட்ட சந்திப்புதான். எனினும் தென்னிந்திய அரசியல் நிலவரம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழகத்தில் நிலவும் அரசியல் குறித்து நேரடியாக கருத்துகள் கூறி வருகிறார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் அரசியல் பற்றி பேசி வரும் நிலையில் கேரள முதல்வருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்