குஜராத் ‘மாடல்’ தோல்வி; அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ராகுல் காந்தி உறுதி

By பிடிஐ

“இம்முறை நான் உறுதியாக நம்புகிறேன், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போவதை யாரும் தடுக்க முடியாது” என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் ஆளும் பாஜக-வும் குஜராத் ‘மாடல்’ தோல்வியடைந்துள்ளதால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அச்சமடைந்துள்ளனர் என்றார் ராகுல் காந்தி.

அகமதாபாத்தில் கட்சித் தொண்டர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ‘சம்வாத்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது:

“இந்த முறை நான் உறுதியாக நம்புகிறேன், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்வதை யாரும் தடுக்க முடியாது என்று, குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடியும், ஆளும் பாஜகவும் அச்சத்தில் உள்ளனர். உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. ஆளும் பாஜக-வின் ‘குஜராத் மாடல்’ என்பதன் ஓட்டைகள் இப்போது அம்பலப்பட்டு விட்டது.

இந்த மாடல் இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறு முதலாளிகள் என்று எத்தரப்பிற்கும் உதவவில்லை. 5-10 பேர் மட்டுமே இதனால் பயனடைந்துள்ளனர்.

மோடிஜி ஊடகங்கள் மீது அழுத்தம் செலுத்தி வருகிறார். சில ஊடக நண்பர்கள் தாங்கள் பயந்து போயிருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

வரும் தேர்தலில் நிறைய விவகாரங்கள் பேசப்பட வேண்டியுள்ளது, விவசாயிகள் துயரம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைப் பேச வேண்டும், வரும் தேர்தலில் வாக்குசாவடி மட்டத்தில் நம் தொண்டர்கள் பாஜக-வின் பொய்களுக்கு எதிராக போராடுவார்கள்” என்றார் ராகுல் காந்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்