சீக்கியருக்கு எதிரான கலவர வழக்குகள்: சிறப்பு குழு ஆய்வு

By பிடிஐ

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான 199 வழக்குகளை கைவிட உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த 199 வழக்குகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், கே.எஸ்.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு வரும் 5-ம் தேதி முதல் செயல்பட உள்ளது. இக்குழு 3 மாதத்தில் 199 வழக்குகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

கடந்த மாதம் 16-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா (தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு) தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நேற்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 mins ago

விளையாட்டு

11 mins ago

கல்வி

58 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்