கலவரம் தொடர்பான வழக்கில் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது சீடர்களாக இருந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் இறந்தனர்.

காவல் துறையின் வேண்டுகோளின்படி கலவரங்கள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் பொதுமக்கள் அனுப்பினர். அவற்றின் அடிப்படையில் கலவரங்களைத் தூண்டியதாக 43 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் உட்பட 43 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக ஹரியாணா போலீஸார் அறிவித்துள்ளனர். அவர்களது படங்கள் காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதன்மையானவர்களாக ஹனிபிரீத் இன்சான் மற்றும் தேரா சச்சாவின் செய்தித் தொடர்பாளர் ஆதித்யா இன்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்