ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை

By செய்திப்பிரிவு

விஐபி.க்களின் போக்குவரத்துக்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க சிலருக்கு கமிஷன் தரப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி (71) உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2007-ம் ஆண்டு தியாகி ஓய்வு பெற்றார். இவருடைய உறவினர் சஞ்சீவ், வழக்கறிஞர் கவுதம் கைத்தான் உட்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தியாகி மற்றும் 9 பேருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இத்தாலியில் இருந்து கமிஷன் பணத்தை இந்தியா கொண்டு வர கவுதம் கைத்தான் உதவினார் என்று சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

44 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்