இந்திய உணவு கழக ஊழல் விவகாரம் - பஞ்சாபில் 30 இடங்களில் சிபிஐ சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாபில் தனியார் வணிகர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தரம் குறைந்த தானியங்களை கொள்முதல் செய்த குற்றச்சாட்டில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பஞ்சாபில் உள்ள தனியார் வணிகர்கள் மற்றும் அரிசி ஆலையினர் பயன்பெறும் வகையில் தரம் குறைந்த உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆபரேஷன் கனக் 2: இந்த ஊழல் புகார் தொடர்பாக ‘‘ஆபரேஷன் கனக் 2” என்ற பெயரில் பஞ்சாபில் தானிய வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், எப்சிஐயின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒருங்கிணைந்த முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

2-வது முறையாக..: குறிப்பாக, ராஜ்புரா, சிர்ஹிந்த், பாட்டியாலா, பதேகர் சாஹிப், மொஹாலி, மோகா, பிரோஸ்பூர், லூதியாணா, சங்ரூர் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. ஏற்கெனவேஜனவரி 13-ம் தேதி சோதனைநடத்தப்பட்ட நிலையில் சிபிஐஅதிகாரிகள் நேற்றும் இரண்டாவது முறையாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தனியாருக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தரம் குறைந்த தானியங்களை எப்சிஐ கிடங்குகளில் இறக்குமதி செய்ய ஒருலாரிக்கு ரூ.1,000-ரூ.4,000 வரைஅதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாகவழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

எப்சிஐ அதிகாரிகள் ஒருங் கிணைந்து நடத்திய இந்த மெகா ஊழலில் மேல்மட்ட அரசு அதிகாரிகள் வரை லஞ்சப் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் முழுவதும் உள்ள பெரும்பாலான எப்சிஐ கிடங்குகளில் இதுபோன்ற ஊழல் நடைபெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்ப நிலை தொழில்நுட்ப உதவியாளர் முதல் நிர்வாக இயக்குநர் வரை இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது.

74 பேர் மீது வழக்கு: பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கையின் அடிப்படையில் எப்சிஐ நிர்வாக இயக்குநர் சுதீப்சிங், அரசு அதிகாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 74 பேர்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்