இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தானின் பதுங்கு குழிகள் ஏவுகணைகள் வீசி அழிப்பு

By செய்திப்பிரிவு

ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையைத் துண்டித்த பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரின் எல்லைப்பகுதியில் அந்நாட்டு ராணுவம் அமைத் திருந்த பதுங்குக் குழிகளை ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் அழித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அமைந்துள்ள நவ்ஸீரா-வில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. அங்கு இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவும் வகையில் அமைக்கப் பட்டிருந்த ஏராளமான பதுங்குக் குழிகளைக் குறிவைத்து வெடி குண்டுகள் மற்றும் ஏவுகணை களை வீசி தாக்கி அவற்றை அழித்தது.

இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எந்தவிதமான எதிர் தாக்குதலும் நடத்தவில்லை. அழிக்கப்பட்ட பதுங்கு குழிகள் தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதற்காக அமைக்கப் பட்டவை. அவை முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை, பாகிஸ்தான் ராணுவம் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தது. இதற்கு தக்க பதிலடி தரப்படும் என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சூளுரைத்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பதுங்குக் குழிகள் ஏவுகணைகள் வீசி தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்திய ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தும் என்ற பீதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்