கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரிடம் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. க‌ர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்துவைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “வீர சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். இந்து மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். இந்த சிறையில் கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதியில் இருந்து ஜூலை 13-ம் தேதி வரைஅடைக்கப்பட்டிருந்தார். சாவர்க்கர் 99 நாட்கள் இங்கு இருந்ததை நினைவுக்கூரும் வகையில் அவரது புகைப்படம் ஹிண்டல்கா சிறையில் திறக்கப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

36 mins ago

சுற்றுலா

48 mins ago

கல்வி

5 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்