வடமாநிலங்களை தொடர்ந்து வாட்டுகிறது கடுங்குளிர்: பனிமூட்டத்தால் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி

By பிடிஐ

வடமாநிலங்களில் தொடர்ந்து கடுங்குளிர் வாட்டி வருகிறது. டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவு நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தில் சிக்கி 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சண்டிகார், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அசாம், மேகாலயா, பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் குளிர்வாட்டி வருகிறது. அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே மெல்ல ஊர்ந்து செல்கின்றன. ரயில் போக்குவரத் தும் கடுமையாக பாதிப்படைந்துள் ளது. சுமார் 84 ரயில்கள் தாமதமாக வந்து செல்கின்றன.

டெல்லியை பொறுத்தவரை நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 24.5 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸும் பதிவானது.

இதற்கிடையில் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவு நெடுஞ்சாலையில் பனிமூடியதால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரிலும் கடுங்குளிர் வாட்டி வருகிறது. வெப்பநிலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பள்ளத்தாக்கின் பெரும் பாலான பகுதிகளில் பனிப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. தெற்கு காஷ் மீரின் கோகர்நாக், வடக்கு காஷ் மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முன் தினம் இரவு மிக குறைந்த அளவாக 4.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நகரில் 4.4 டிகிரி செல்சியஸுக்கும் கீழே வெப்பம் சென்றதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்