காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் வங்கிக் கொள்ளை

By பீர்சதா ஆஷிக்

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத சில நபர்கள் வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது பரபரப்பாகியுள்ளது.

புல்வாமா ராட்னிபுரா பகுதியில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கியில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் சில நபர்கள் துப்பாக்கி முனையில் வங்கியைக் கொள்ளை அடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது பற்றி போலீசாரிடம் உறுதியான தகவல்கள் இல்லை எனினும் ரூ.10 லட்சம் வரையில் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என்று மற்ற சில தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகே இது 3-வது வங்கிக் கொள்ளை சம்பவமாகும்.

நவம்பர் 21-ம் தேதி புல்வாமா வங்கியிலும் டிசம்பர் 8-ம் தேதி பட்காம் வங்கியிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பழைய நோட்டுகள் உட்பட இந்த 2 வங்கிகளிலிருந்தும் ரூ.21 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மற்றுமொரு வங்கிக் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்