புதிய ஆளுநர்கள் நியமனம் இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

By செய்திப்பிரிவு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டது உட்கட்சி விவகாரம் என்றாலும், அது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

அக்கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கை:

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களாக பாஜக தலைவர் களை அக்கட்சி தலைமையிலான மத்திய அரசு நியமித்துள்ளது கண்டனத்துக்குரியது. வேறு பதவி அளிக்க முடியாத கட்சித் தலைவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் காங்கிரஸ் கலாச்சாரத் தின் தொடர்ச்சியே இது. இந்தச் செயல் ஆளுநர் பதவிகளை அரசியலாக்குவதுடன், மோசமான முன்னுதாரணமாகவும் அமையும்.

பாஜகவின் தேசிய தலைவர் நியமனம் உட்கட்சி விவகாரம் என்றாலும், அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. சொராபுதீன் ஷேக், பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.

இப்படி சர்ச்சைக்குரிய பின்னணி கொண்ட ஒருவர், மத்தியில் ஆளும் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவது, நாட்டுக்கு அளிக்கும் சரியான சமிக்ஞை இல்லை.

இந்த வழக்கில் நீதிபதி இடமாறுதல், அமித் ஷாவுக்கு எதிராக வாதாடி வந்த கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மறுத்தது, அமித் ஷாவுக்கு ஆதரவாக வாதாடிய மற்றொரு வழக்கறிஞரை அப்பதவிக்கு ஆலோசனை வழங்கியது ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்