சுஷ்மா ஸ்வராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

By பிடிஐ

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உட்சுரப்பிகள் பரிசோதனைகளுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய சிகிச்சை மையத் தலைவரான பல்ராம் ஐரானின் கீழ் இதய நரம்பியல் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, ''சுஷ்மா சுவராஜ் நேற்று மாலை சுமார் 7.22 மணியளவில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு மற்றும் சில மருத்துவப் பிரச்சனைகள் உள்ளன. அவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) குறிப்பிட்ட சில உட்சுரப்பிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.

முந்தைய சிகிச்சைகள்

64 வயதான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஏப்ரல் மாதம் இதய அடைப்புக் கோளாறு காரணமாக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல அக்டோபர் 25-ம் தேதி, தனது வழக்கான மருத்துவப் பரிசோதனைகளுக்காக சுவராஜ் ஸ்வராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

13 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்