பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய வரலாற்றின் மிக முக்கிய பொருளாதார சீர்திருத்தம்: ரத்தன் டாடா

By பிடிஐ

ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய வரலாற்றின் மிக முக்கிய 3 பொருளாதார சீர்திருத்தங்களில் ஒன்று என தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே டாடா வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய மூன்று பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் ஒன்று.

பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ள மொபைல், டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நம் நாட்டை பணம் சார்ந்த சமூக பொருளாதாரத்திலிருந்து விடுபடச் செய்யும். நாளடைவில் இது ஏழை மக்கள் நலனை பாதுகாக்க உதவும்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள இந்த திடமான முடிவுக்கு அதே கருத்துடைய குடிமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அரசின் இந்த நடவடிக்கை நாளைய இந்தியாவில் சீரான பொருளாதார வளத்துக்கு வித்திடுவதற்கான வாய்ப்பு" எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்