உ.பி. ஓட்டல் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்: விசாரணை நடத்த முதல்வர் யோகி உத்தரவு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர்காயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லெவனா ஓட்டலின் 3-வது தளத்தில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இந்தத் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஆக்சிஜன் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள் ஓட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும் காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தீக்காயங்களுடன் மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்