ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

By செய்திப்பிரிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் தவறு இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவுக் கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கட்காடின் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தீவிரவாத குழுக்களிடம் இருந்து நாட்டைக் காக்க அனைத்து நாடுகளுக்கும் தார்மிக உரிமை உள்ளது.

அந்த அடிப்படையில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் சம்பவத்தில் தவறு இல்லை. அதனை ரஷ்யா வரவேற்கிறது.

பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்ய ராணுவம் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது உண்மை தான். ஆனால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலோ, சர்ச்சைக் குரிய பகுதியிலோ நடைபெற வில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேஜ்ரிவால் பாராட்டு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில், “எனக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் 100-க்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பாகிஸ்தான் விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

29 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்