சத்தீஸ்கரில் 57 நக்ஸல்கள் சரண்

By பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட் டத்தில் 57 நக்ஸல் தீவிரவாதி கள், 297 நக்ஸல் அனுதாபிகள் நேற்று அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.

இதுதொடர்பாக சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் எலசெலா கூறும்போது, “ஒட்டு மொத்தமாக 57 நக்ஸல்கள் மற்றும் 297 நக்ஸல் ஆதரவாளர்கள் காவல் துறை, சிஆர்பிஎப் அதிகாரிகள் ஆகியோர் முன்பு மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் 17 மாவோயிஸ்டுகளின் தலைக்கு சன்மானம் அறிவிக்கப் பட்டிருந்தது. 17 நக்ஸல்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். நக்ஸல் வன்முறைகளால் அதிருப்தி அடைந்த இவர்கள், தங்கள் பகுதியில் வளர்ச்சியை எதிர்நோக்கி சரணடைந்துள்ளனர். மோதல் நிறைந்த பஸ்தார் பகுதியில் இது நிகழ்ந்திருப்பது நல்ல அறிகுறி” எனத் தெரிவித்தார்.

நக்ஸல்கள் சரணடையும் நிகழ்ச்சியில் பஸ்தார் ஐ.ஜி எஸ்ஆர்பி கலூரி, சுக்மா மாவட்ட ஆட்சியர் நீரஜ் பன்சாத், சிஆர்பிஎப் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் பஸ்தார் பகுதியில் 1,400 நக்ஸல்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதுவரை சரணடைந்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்