துல்லிய தாக்குதலுக்கான வீடியோ: மத்திய அரசிடம் ராணுவம் ஒப்படைப்பு

By பிடிஐ

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை துல்லிய தாக்குதல் மூலம் நிர்மூலம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை அரசிடம் ராணுவம் ஒப்படைத்துள்ளது என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் புகுந்து தாக்கியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளி யிட வேண்டும் என பல்வேறு தரப்பில் குரல்கள் எழத் தொடங்கி யுள்ளன. இதனிடையே நடை முறைப்படி அரசிடம் வீடியோ ஆதாரங்களை ராணுவம் ஒப் படைத்துள்ளது என ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

ஆஹிர் மேலும் கூறும்போது, “வகுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. துல்லிய தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் தான் அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சரோ, பிரதமரோ, உள் துறை அமைச்சரோ அறிவிக்க வில்லை. ராணுவ நடவடிக்கை களுக்கான தலைவர் (டிஜிஎம்ஓ)தான் அறிவித்தார். அதுதான் சரியான நடைமுறை. அதைத் தான் ராணுவம் செய்தது. தற்போது நேரம் மாறிவிட்டது. வீடியோ ஆதாரங்கள் அரசிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன” என்றார்.

வீடியோ ஆதாரங்கள் எப்போது வெளியிடப்படும் என செய்தியாளர்கள் உள்துறையின் மற்றொரு இணையமைச்சரான கிரண் ரிஜிஜுவிடம் கேட்டபோது, “அரசின் மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும். ராணுவம் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

விவாதம்

வீடியோ ஆதாரத்தை வெளி யிட வேண்டும் என ஒருதரப்பும், வெளியிடக் கூடாது என ஒரு தரப்பும் வாதிட்டு வருகின்றன.

“ராணுவம் துல்லிய தாக்குத லில் ஈடுபட்டது போலியானது” என காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம் தெரி வித்துள்ளார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் இது தொடர்பாக சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, “இந் நடவடிக்கையை யாரேனும் கேள்விக்கு உட்படுத்தினால், அவர்கள் தங்களின் குற்றச் சாட்டுக்கான முகாந்திரத்தைத் தெரிவிக்க வேண்டும். அதே சமயம் ராணுவம் சில குறிப்பிட்ட வீடியோ காட்சிகளை அதாவது, தாக்குதல், குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளின் உடல்கள் ஆகிய பகுதிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.பி. மாலிக் கூறும்போது, “சில முட்டாள்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வீடியோவை வெளியிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

30 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்