டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மறுப்பு

By செய்திப்பிரிவு

பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி இல்லை என்று மத்திய குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் திங்கள் கிழமை தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த முறை டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்தன் இருந்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘கிரண் பேடியின் பெயர் எங்கள் கட்சியில் விவாதத்திற்கு வர வில்லை. பத்திரிகைகள் தேவையில் லாமல் டெல்லியின் பாஜக முதல்வர் பதவிக்கு அவரது பெயரை இழுக்கின்றன.

இப்போது எனது கவனம் புதிய பணியான மத்திய அமைச்சர் பொறுப்பில்தான் உள்ளது. டெல்லி முதல்வர் பதவியில் கவனம் செலுத்த வில்லை’ என்று கூறினார்.

கடந்த மாதம் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான நிதின் கட்கரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக சார்பில் கிரண் பேடி, ஆம் ஆத்மி யின் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர் கொள்வார் என குறிப்பிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து ஹர்ஷவர்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்கரியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு, அந்த டுவிட்டர் செய்தி போலியானது என அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி என்ற தகவல் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்