பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை வீடியோவை உரிய நேரத்தில் வெளியிடுவோம்: பாதுகாப்புத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலை அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி பாகிஸ்தான் பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவு வரை முன்னேறிய இந்திய வீரர்கள் 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர்.

இந்த தாக்குதலை மறுத்துள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்திய தரப்பினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய பாது காப்புத் துறை வட்டாரங்கள் டெல்லியில் நேற்று கூறும்போது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ தாக்குதல் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை எப்போது, எங்கு வெளியிட வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். உரிய நேரத்தில் வீடியோ வெளியிடப்படும்” என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

54 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்