மக்களவைத் தேர்தலில் பாஜக.வை காங்கிரஸால் எதிர்க்க முடியுமா?- அமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி

By பிடிஐ

காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது, வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அந்த கட்சியால் பாஜகவை எதிர்க்க முடியுமா என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பி யுள்ளார்.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஊழல் விவகாரங்கள் காரண மாக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழந்துள்ளது. அசாமில் சட்டவிரோத குடியேற் றத்தை அனுமதித்ததன் காரணமாக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித் துள்ளது. மேற்குவங்தத்தில் இடது சாரி கட்சிகளும் காங்கிரஸும் இணைந்து பொருந்தா கூட்டணியை அமைத்தன. அதற்கான பலனை அந்த கூட்டணி இப்போது அனுபவிக்கிறது.

பாஜக எழுச்சி

கடந்த 2008-ம் ஆண்டில் தென் னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது ஆந்திரா வில் தெலுங்கு தேசத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ளோம். கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்முறை யாக பாஜக கால் பதித்துள்ளது. பிஹாரில் அசைக்க முடியாத சக்தி யாக பாஜக உருவெடுத்துள்ளது.

இப்போது வடகிழக்கு மாநிலங் களிலும் பாஜக தனது செல் வாக்கை நிரூபித்துள்ளது. முதல் முறையாக அசாமில் ஆட்சி அமைக்கிறோம். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற் றுள்ளோம்.

காங்கிரஸ் தலைவர்களின் தவறான அணுகுமுறைகளால் அந்த கட்சி வலுவிழந்து வருகிறது. வரும் 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை காங்கிரஸால் எதிர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.

காங்கிரஸ் கட்சியை சீரமைக்க அறுவைச் சிகிச்சை அவசியம் என்று அந்த கட்சித் தலைவர்களே கூறுகின்றனர். அவர்கள் எதைக் குறிப்பிட்டு பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்