மாநிலங்களவைக்கு பிஹாரில் இருந்து ராப்ரிதேவி, ராம்ஜெத்மலானி தேர்வாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் 57 உறுப் பினர் பதவிகள் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் காலியாகின்றன. மொத்தம் 15 மாநிலங்களில் காலியாகும் இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜுன் 11-ல் நடைபெற உள்ளது.

பிஹாரில் ஆளும் ஐஜத கட்சியைச் சேர்ந்த 5 உறுப் பினர்கள் ஓய்வு பெற உள்ளனர். அங்கு தற்போதுள்ள நிலவரப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் மட்டுமே கிடைப் பார்கள். எஞ்சிய 3 உறுப்பினர் பதவிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு இரண்டும், பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்க உள்ளது.

இந்நிலையில் ஆர்ஜேடி தலைவர் லாலு, தனது மனை வியும், மாநில மேலவை உறுப் பினருமான ராப்ரி தேவி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆகியோருக்கு இப்ப தவிகளை அளிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்ஜேடி-யின் டெல்லி வட்டா ரங்கள் கூறும்போது, “லாலு டெல்லி வரும்போது அவர் தங்குவதற்கு நகரில் முக்கியப் பகுதியில் தற்போது குடியிருப்பு இல்லை. இதனால் அவர் வெகு தொலைவில் உள்ள குர்காவ்ன் நகரில் தனது பண்ணை வீட்டில் தங்குகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தில் ஒருவரை மாநிலங் களவை உறுப்பினர் ஆக்கினால் இப்பிரச்சினை தீரும் என்பது அவரது யோசனை. இதுதவிர கால்நடைத் தீவன ஊழல் வழக் கில் வாதிட்டு வரும் ராம்ஜெத் மலானியை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கும் கட்சி சார்பில் ஒரு பதவி அளிக்க முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

கடந்த 2014 மக்களவை தேர் தலில் தோல்வி அடைந்த லாலுவின் மகள் மிசா பாரதிக்கு, ராப்ரி தேவி ராஜினாமா செய்யும் மாநில மேலவை உறுப்பினர் பதவி தரப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தங்கள் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சரத்யாதவ், தேதிய பொதுச் செயலாளர் கே.சி. தியாகி ஆகியோருக்கு மாநிலங் களவை எம்.பி. பதவி அளிப் பார் என்று எதிர்பார்க்கப்படுகி றது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள இவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 7-ம் தேதியுடன் முடிகிறது.

பிஹாரில் பாஜக சார்பில் ஓர் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்