மோடியின் உண்மையான பிறந்த நாள் என்ன? - காங்கிரஸ் கட்சி கேள்வி

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது பிறந்த நாளில் முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமரின் பட்டமேற்படிப்பு விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவந்த குஜராத் பல்கலைக் கழகம், தற்போது அதை வெளியிட் டுள்ள நிலையி்ல் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஷக்திசின் கோஹில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடி ப்ரீ-சயின்ஸ் (12-ம் வகுப்புக்கு இணை யானது) படித்த விஸ்நகர் எம்.என். கல்லூரி பதிவேட்டில் அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 29, 1949 என்று உள்ளது. பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் பிறந்த நாளை குறிப்பிடவில்லை. ஆனால் வயதை குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் செப்டம்பர் 17, 1950 என்று பொது வெளியில் உள்ளது” என்றார்.

நரேந்திரகுமார் தாமோதர் தாஸ் மோடி என்று பிரதமரின் பெயரை குறிப்பிட்டுள்ள கல்லூரி பதிவேட் டையும் அவர் காண்பித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் வெவ்வேறு பிறந்த நாளுக்கான காரணத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம். பிரதமரின் பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களில் அவரது பிறந்த நாள் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது?

2014 மக்களவை தேர்தலின் போது மோடி தனது வேட்பு மனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.வும், குஜராத் பல்கலைக்கழகத் தில் எம்.ஏ.வும் படித்ததாக கூறி யுள்ளார்.

இதில் அவர் தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டு, தான் திருமணம் ஆனவர் என்பதை வெளிப்படுத்தி னார். பிரதமரின் 56 அங்குல மார்பளவு குறித்து அறிந்துகொள்ள நாட்டு மக்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அவரது பிறந்த நாளை அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

பிரதமர் எங்கு, எப்போது பி.ஏ. படித்தார்? அவருடன் படித்த 10 மாணவர்களின் பெயரையாவது வெளியிட வேண்டும்” என்றார்.

அரசியல் அறிவியலில் மோடி எம்.ஏ. பட்டம் பெற்றதாக குஜராத் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. அவரது பி.ஏ. கல்வித் தகுதி குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் கூறியது.

இது தொடர்பாக ஷக்திசின் கோஹில் கூறும்போது, “பிரதமர் எம்.ஏ. அட்மிஷன் பெற்றபோது, பி.ஏ. குறித்த விவரங்களை தந்திருக்க வேண்டும். அந்த விவரங் கள் இல்லை என்று குஜராத் பல்கலைக்கழகம் எப்படி கூறலாம்? டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து குஜராத் பல்கலைக்கழகத் துக்கு மோடி இடம்பெயரும்போது, இடப்பெயர்வு சான்றிதழும் அளித் திருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்