10.00 மணி நிலவரம்: அசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா தொடர்ந்து முன்னிலை

By ஆர்.ஷபிமுன்னா

இன்று காலை முதல் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் 10.00 மணி நிலவரப்படி, அசாமில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸும் வகிக்கும் முன்னிலை தொடர்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் காங்கிரஸுக்கு தோல்வி நிலை தெரிகிறது. இங்கு முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி தன் கூட்டணிகளுடன் ஆட்சி அமைக்கும் நிலை நிலவுகிறது. அசாமில் 126 தொகுதிகளில் பாஜக 67 தொகுதிகளில் வெல்லும் நிலை உள்ளது. காங்கிரஸுக்கு 25 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பத்ருத்தீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய முன்னணி 14 மற்றும் இதர கட்சிகள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்காளத்தின் 294 தொகுதிகளில் 276-ன் முன்னிலை வெளியாகி உள்ளது. இதில் அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 191, இடதுசாரி கூட்டணி 37, காங்கிரஸ் 36 மற்றும் பாஜகவிற்கு12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

கடந்த 2014-ல் நடந்த மக்களவை தேர்தலுக்கு பின் அதிகமான பிரதமர் நரேந்தர மோடியின் செல்வாக்கு, 2015 பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு சரியத் துவங்கி இருந்தது.

தற்போது பாஜகவிற்கு அசாமில் கிடைக்கும் வெற்றி மீண்டும் மோடியின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்