ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த கிராம மக்கள்: டிஜிபி பாராட்டு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம், துஷ்கான் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளைப் பிடித்து கிராம மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள் துஷ்கான் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருந்தனர். இந்த இரண்டு பேரில் ஒருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மிக முக்கிய குற்றவாளி.

ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பின் காமண்டரான தலிப் உசேன், இவர்தான் அந்த மாநிலத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். இதே போல், பைசல் அஹ்மத் தர், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரையும், துஷ்கான் கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர். மேலும், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த, 2 பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுத்த கிராம மக்களின் துணிச்சலை பாராட்டியுள்ள டிஜிபி தில்பாக் சிங், கிராம மக்களுக்ககு ரூ.2 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

32 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்