தெலங்கானாவில் கடும் வெயிலுக்கு 315 பேர் பலி

By பிடிஐ

தெலங்கானா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலுக்கு இதுவரை 315 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

கோடைக் காலம் தொடங்கு வதற்கு முன்பிருந்தே பல மாநிலங்களில் கடும் வெயில் காணப்பட்டது. இப்போது தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெயிலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் மட்டும் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்து கடந்த 21-ம் தேதி வரை கொளுத்தும் வெயிலுக்கு 315 பேர் இறந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதில் நல்கொண்டா மாவட்டத்தில்தான் அதிகப்பட்சமாக 91 பேர் இறந்துள்ளனர். இத்தகவலை 3 நபர் குழுவினர் உறுதிப்படுத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் அதிகமாக வெயில் காணப்படுகிறது. அதிகபட்சமாக ராமகுண்டம் பகுதியில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 72 மணி நேரத்துக்கு அடிலாபாத், நிசாமாபாத், கரீம்நகர், மேடக், வாரங்கல், கம்மம் மாவட்டங்களில் கடும் வெயில் நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்