சேலத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி திருப்பதி எஸ்.பி.யாக பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பதி நகர முதல் பெண் எஸ்.பி. யாக சேலத்தைச் சேர்ந்த ஜெய லட்சுமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல் கின்றனர். எனவே, இங்கு அசம்பா வித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க தனி எஸ்.பி. (சட்டம், ஒழுங்கு) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இப்போது திருப்பதி நகரின் புதிய எஸ்.பி.யாக சேலத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி பொறுப்பேற் றுள்ளார். இதன்மூலம் இந்தப் பதவி யில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதிக்கு பல விஐபிகள் வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் தனி கவனம் செலுத்தப்படும். செம்மரக் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே எனது முதல் குறிக்கோள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கல்வி

8 mins ago

மாவட்டங்கள்

38 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

48 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்