டெல்லியில் டாக்ஸி டிரைவர் மீது ஆப்பிரிக்கர்கள் தாக்குதல்

By ஐஏஎன்எஸ், பிடிஐ

டெல்லியில் டாக்ஸியில் 4 பேருக்கு மேல் ஏற்றிச் செல்ல மறுத்த டிரைவரை 6 ஆப்பிரிக்கர்கள் சேர்ந்து மூர்க்கத்தனமாக தாக்கி யுள்ளனர்.

“தெற்கு டெல்லியில் மெஹரவுலி பகுதியில் நேற்று காலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட ஆப்பிரிக்கர்கள், சிடிஆர் சவுக் பகுதியிலிருந்து துவாரகா செல்வதற்கு ஓலா காரை புக் செய்துள்ளனர்.

கார் டிரைவர் நருதீன், தனது காரில் நான்கு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்வேன் எனக் கூறி 6 பேரை ஏற்ற மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த ஆப்பிரிக்கப் பெண் உட்பட 6 பேரும் நருதீனை தாக்கி யுள்ளனர். இதனால் காயம டைந்த நருதீன் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 6 ஆப்பிரிக்கர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. டிரைவரைத் தாக்கிய பின், 5 ஆண்களும் ஓடி விட்டனர். ஆனால், அப்பெண்ணை நஸ்ருதீன் பிடித்துக் கொண்டார்” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

இதனிடையே வடக்கு கோவா வின் மபுசா பகுதியில் இரண்டு நைஜீரியர்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாரா கிராமத்தில் 39 வயதுள்ள ஒரு பெண்ணை இரு நைஜீரியர்கள் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் அப்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்” என்றார்.

ஆப்பிரிக்க மாணவர்களுடன் சந்திப்பு

ஆப்பிரிக்கர்கள் மீது இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து, டெல்லி ஜன்தர் மந்தரில் ஆப்பிரிக்க மாணவர்கள் சிலர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவர்களைச் சந்தித்த வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், ஆப்பிரிக்க மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். இதனை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் கொல்லப்பட்ட காங்கோ இளைஞர் ஆலிவரின் குடும்பத்தினர் இந்தியா வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் நேற்று சந்தித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்